திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் வரும் 29-ம் தேதி மக்களிடம் மனுக்களை பெறுகிறார் ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில்  வரும் 29-ம் தேதி மக்களிடம் மனுக்களை பெறுகிறார் ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
Updated on
1 min read

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சாரத்தை திருவண்ணா மலை மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி தொடங்கும் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் இருந்து மனுக் களை பெற உள்ளார் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சார பயணத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். திருவண்ணாமலை நகரம் திருக்கோவிலூர் சாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள கலைஞர் அரங்கில் காலையில் இருந்து பிற்பகல் வரையும், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் வட்டார போக்கு வரத்து அலுவலகம் அருகே உள்ள அண்ணா அரங்கில் பிற்பகலில் இருந்து மாலை வரை என பொதுமக்களிடம் இருந்து நேரடியாக குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை மு.க.ஸ்டாலின் பெறுகிறார். மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதே எனது முதல் பணி, எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண் பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு, நான் பொறுப்பு என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த வாய்ப்பை பயன்படுத் திக் கொண்டு குறைகள் மற்றும்கோரிக்கைகளை ஸ்டாலினிடம் பொதுமக்கள் மனுக்களாக அளித்து, ஆட்சி மாற்றத்துக்கான அத்தியாயத்தை உருவாக்குங் கள். ஸ்டாலின் தான் வராரு, விடியலை தரப்போறாரு” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in