

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடியில் நேற்று இரவு ராமநாதபுரம் நோக்கி சென்ற காரும், எதிரே வந்த லாரியும் மோதிக் கொண்டன.
இதில், காரில் இருந்த மண்டபம் முகாமை சேர்ந்த பிச்சை மகன் கிளிஸ்ட்டாஸ்(39), மதியப்பன் மகன் சேசுப்பிள்ளை(17), தங்கச்சி மடம் எஸ்.ஆராக்கியம்(41) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் பயணித்தவர்கள் மீன்பிடி தொழில் தொடர்பாக வேதாரண்யம் சென்றுவிட்டு திரும்பியதும் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது. கோட்டைப்பட்டினம் போலீஸார் விசாரிக்கின்றனர்.