போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.88.58 கோடி ஓய்வூதிய பலன்

சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு  அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஓய்வூதியப் பயன்களை வழங்கினார்.
சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஓய்வூதியப் பயன்களை வழங்கினார்.
Updated on
1 min read

திருநெல்வேலி மண்டலத்தில் கடந்த 2019 ஏப்ரல்முதல் 2019 டிசம்பர் வரை ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 434 பேருக்குரூ.88.58 கோடி ஓய்வூதியப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சிசங்கரன்கோவில் அரசுபோக்குவரத்துக் கழக பணிமனையில் நடைபெற்றது. தென்காசி ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார். போக்குவரத்து நிர்வாக இயக்குநர் திருவம்பலம்பிள்ளை, தலைமை கணக்கு அதிகாரி மாரியப்பன், கோட்டாட்சியர் முருகசெல்வி, கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன்,சங்கரன்கோவில் பணிமனை கிளைமேலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்கி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து ரூ.10 லட்சம்மதிப்பில் சங்கரன்கோவில்போக்குவரத்து பணிமனை வளாகத்தில் தார் சாலைஅமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

வட்டாட்சியர் திருமலைசெல்வி, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சாந்தி, நகராட்சி பொறியாளர் முகைதீன் அப்துல்காதர், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், நெல்லை பேரங்காடி துணைத் தலைவர் வேலுச்சாமி கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in