

ஆரணி அருகே ஏரியில் இருந்து லாரியில் மண் கடத்தி வந்த ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆரணி கிராமிய காவல் துறையினர் கல்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப் போது, அவ் வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, செங்கல் சூளைக்காக ஏரியில் இருந்து மண் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கல்பூண்டி கிராமத்தில் வசிக்கும் லாரி ஓட்டுநர் பிரசாந்த்(23) என்ப வரை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட மண் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர்.