ராணிப்பேட்டை மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில்  சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட தாக 21 பேரை காவல் துறையினர் நேற்று ஒரே நாளில் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தை முற்றிலும்தடுக்க காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டுள் ளார். அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர்கள் பூரணி (ராணிப்பேட்டை), வெங்கடகிருஷ்ணன் (அரக் கோணம்-பொறுப்பு) ஆகியோர் தலைமையில் 8 காவல் ஆய்வாளர்கள், 20 உதவி ஆய்வாளர்கள், 86 காவலர்கள் என 114 பேர் கொண்ட குழுவினர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ராணிப்பேட்டை, சிப்காட், ஆற்காடு கிராமியம் மற்றும் நகரம், திமிரி, அரக்கோணம் கிராமியம், சோளிங்கர், தக்கோலம், நெமிலி உள்ளிட்ட பகுதிகளில் காட்டன் சூதாட்டம் நடத்தியதாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். காட்டன் சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தத் தொழிலை கைவிட்டு மனம் திருந்தி வாழ நினைத்தால் அவர்களுக்கு மறுவாழ்வு உதவி அளிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in