

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் மாணவிகளுக்கு நேரடியாக வகுப்பு நடத்தவில்லை. அதனால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கவில்லை.
சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை, சேலம்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் 6-ம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை பாடம்நடத்துகிறார். கடந்த 19-ம் தேதிபள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியை ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், காய்ச்சல் காரணமாக தனியார்மருத்துவமனையில் கரோனாபரிசோதனை செய்தார். பரிசோதனையில் அவருக்குகரோனா தொற்று இருப்பது நேற்று (22-ம் தேதி) உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் கூறியுள்ளது.
ஆசிரியைக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர் களையும் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.