

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட11-வது வார்டு சிவசக்தி நகரில்ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.மேற்குறிப்பிட்ட பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்றும், சாலைகள் சிதிலமடைந்துள்ளதாகவும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்துஅப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.