

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரி லிருந்து சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 2,730 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,080 வாக்கு எண்ணும் இயந்திரங்கள், 2,250 வாக்குப்பதிவு செய்ததை உறுதிபடுத்தும் இயந்திரங்கள் வரப்பெற்றுள்ளன. இந்த இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.