உளுந்தூர்பேட்டைக்கு நாளை மறுதினம் முதல்வர் வருகை பாதுகாப்பு குறித்து ஐஜி ஆய்வு

முதல்வர் வருகையையொட்டி உளுந்தூர்பேட்டையில் ஆய்வு மேற்கொள்ளும் வடக்கு மண்டல ஐஜி நாகராஜ்.
முதல்வர் வருகையையொட்டி உளுந்தூர்பேட்டையில் ஆய்வு மேற்கொள்ளும் வடக்கு மண்டல ஐஜி நாகராஜ்.
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டையில் மொழிப்போரில் ஈடுபட்டு உயிரி ழந்தோர் நினைவாக ஜனவரி 25-ல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிக முதல்வர் பழனிசாமி கலந்துகொள்ள உள்ளார்.இது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடு குறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பி.நாகராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதல்வர் வருகையின் போது தேவையான பாதுகாப்பு மற்றும் வழித்தடங்களில் பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது, விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் எழிலரசன், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் சக்தி, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in