இலங்கை கடற்படை தாக்குதலால் கடலில் மூழ்கி உயிரிழந்த 4 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விசாரணை நடத்த கோரி பிரதமருக்கு கடிதம்

கடலில் மூழ்கிய தமிழக மீனவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையின் ஸ்கூபா வீரர்கள். (அடுத்த படம்) இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதியக் கோரி கோட்டைப்பட்டினத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள். (உள்படம்) உயிரிழந்த மீனவர்கள் மெசியா, நாகராஜ், செந்தில்குமார், டார்வின்.
கடலில் மூழ்கிய தமிழக மீனவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையின் ஸ்கூபா வீரர்கள். (அடுத்த படம்) இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதியக் கோரி கோட்டைப்பட்டினத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள். (உள்படம்) உயிரிழந்த மீனவர்கள் மெசியா, நாகராஜ், செந்தில்குமார், டார்வின்.
Updated on
2 min read

இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதி மூழ்கடித்ததில் உயி ரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி, அரசு விதிகளுக்கு உட்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித் துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதமும் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), உச்சிப்புளி நாகராஜ்(52), செந்தில்குமார் (32), மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த சாம்சன் டார்வின் (28) ஆகிய நான்கு பேர் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து கடந்த 18-ம் தேதி கடலுக்கு சென்றனர்.

இவர்கள் நெடுந்தீவு அருகே 19-ம் தேதி அதிகாலை மீன் பிடித் துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல் லையை கடந்து மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்களை கைது செய்வதற்காக தங்களது கடற்படை படகில் துரத்தினர்.

அப்போது, மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியது. இதில், மீனவர்களின் படகு மூழ்கி, 4 மீனவர்களும் நடுக் கடலில் மாயமாகினர். இதையடுத்து மூழ்கிய மீனவர்களையும் படகை யும் இலங்கை கடற்படைக்கு சொந்தமான படகுகளும், கப்பல் ஒன்றும் நேற்று முன்தினம் தேடும் பணியில் ஈடுபட்டன. அப்போது, நெடுந்தீவு அருகே மூழ்கிய படகில் இறந்த நிலையில் இருந்த செந்தில் குமார், சாம்சன் டார்வின் ஆகியோ ரின் உடல்களை கடற்படையின் ஸ்கூபா வீரர்கள் மீட்டனர்.

மற்ற இருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. மெசியா, நாகராஜ் ஆகியோரது உடல்களும் நேற்று மீட்கப்பட்டன. 4 பேரின் உடல் களும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

மீனவர்களின் உடல்களை ராமேசுவரத்துக்கு அனுப்பிவைக்க யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த மீனவர்கள் குடும்பங் களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் மற்றும் விசைப்படகுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டம் கோட் டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஜன.18-ம் தேதி 214 விசைப்படகுகள் கடலுக்கு சென் றுள்ளன. இதில், ஆரோக்கிய சேசுவுக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில் குமார், சாம்சன் டார்வின் ஆகிய 4 பேர் சென்றுள்ளனர். இவர்கள் 19-ம் தேதியே கரைக்கு திரும்பியிருக்க வேண்டும். கரைக்கு திரும்பாததை அறிந்த நிலையில், கடலோர காவல்படையின் கப்பல், கப்பல் படையின் கப்பல் மற்றும் ஹெலி காப்டர் மூலம் தேடும் பணி நடந் தது. தற்போது இந்த 4 மீனவர் களும் இலங்கை கடற்படையின் தாக்குதலில் இறந்துவிட்டதாக மீன வர்கள் மூலம் தகவல் வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப் பதுடன், அந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் முதல்வர் நிவா ரண நிதியில் வழங்க உத்தரவிட் டுள்ளேன். மேலும் அரசின் விதி முறைகளுக்கு உட்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு அல்லது அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகுக்கு அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு உரிய நிவா ரணம் வழங்கப்படும்.

இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடு பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வா தாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை வன்மை யாக கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன். இச்சம்பவம் குறித்து தூதரகம் மூலம் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி பிரதமருக்கு கடிதமும் எழுதி யுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் முதல் வர் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் மறியல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in