தி சென்னை சில்க்ஸ் குரூப் சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகனம்

சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை அழைத்து செல்ல வசதியாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம் தி சென்னை சில்க்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை ஆட்சியர் ராமன் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தார்.

Updated on
1 min read

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதியாக தி சென்னை சில்க்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் ஆட்சியர் அலுவல கத்தில் வாரம்தோறும் திங்கள் கிழமை ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருவோருக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களுக்கு செல்ல வசதியாக தி சென்னை சில்க்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி மூலம் ரூ.5 லட்சம் மதிப்பில் ஆறு பேர் அமர்ந்து செல்லும் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

வாகனத்தை தி சென்னை சில்க்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி நிறுவன மேலாண்மை இயக்குநர் கண்ணபிரான், ஆட்சியர் ராமனிடம் வழங்கினார். இதையடுத்து, ஆட்சியர் ராமன், வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in