பெரம்பலூரில்  அம்மன் பேங்கர்ஸ்-ரியல் எஸ்டேட் குழுமத்தினர் இல்ல திருமண விழா

பெரம்பலூர்  அம்மன் பேங்கர்ஸ்-ரியல் எஸ்டேட் குழுமத்தினர் இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்துகிறார் தனலட்சுமி சீனிவாசன் குழுமத் தலைவர் அ.சீனிவாசன். உடன், மணமக்களின் குடும்பத்தினர்.
பெரம்பலூர்  அம்மன் பேங்கர்ஸ்-ரியல் எஸ்டேட் குழுமத்தினர் இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்துகிறார் தனலட்சுமி சீனிவாசன் குழுமத் தலைவர் அ.சீனிவாசன். உடன், மணமக்களின் குடும்பத்தினர்.
Updated on
1 min read

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கி வரும்  அம்மன் பேங்கர்ஸ்- ரியல் எஸ்டேட் குழுமத்தின் நிறுவனர் ந.முத்தையா-விஜயா முத்தையா ஆகியோரின் மகனும், என்.எம்.கிளினிக் மருத்துவருமான திலீபன் முத்தையாவுக்கும், அந்தமான் பொதுப்பணித் துறை அலுவலர் செல்லபெருமாள்-சவுந்தரவள்ளி ஆகியோரின் மகளும், அந்தமான் நிகோபார் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவருமான செ.ஷில்பிகா தேவிக்கும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டல் திருமண மகாலில் அண்மையில் திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் டாக்டர் அறிவொளி முத்தையா, கம்பம் டாக்டர் ஹரிஷா தேவி, அந்தமான் டாக்டர் சி.ஜோதிபெருமாள் மற்றும் குழுவினர் வரவேற்றனர்.

தனலட்சுமி சீனிவாசன் குழும நிறுவனத் தலைவர் அ.சீனிவாசன், செயலாளர் நீலராஜ், தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் மேலாண் தலைவர் ரோவர் வரதராஜன், பாரத ரக்ஷாமஞ்ச் இந்து அமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் உமேஷ் போச்சப்பன், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ தமிழ்ச் செல்வன், முன்னாள் எம்.பி மருதராஜா, ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை நிர்வாகி கலியபெருமாள் மற்றும் சிதம்பரம், திருவண்ணாமலை சிவனடியார்கள், திமுக, மதிமுக, அமமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.l

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in