

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணி வட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக இணையதள பிரச்சினை காரணமாக பயோமெட்ரிக் முறையில் அத்தியா வசியப் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பேராவூரணி அருகேயுள்ள கழனிவாசல் பகுதியில், பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் அதிருப்தியடைந்த பொதுமக்கள், பேராவூரணி- ஆவுடையார்கோவில் சாலை யில் நேற்று மறியலில் ஈடுபட் டனர்.
தகவலறிந்து சென்ற பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர்.