சசிகலா வந்தால் 4 மாதம்கூட இந்த ஆட்சி இருக்காது திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பாதரை கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்  மு.க.ஸ்டாலின் பேசினார்.படம்: கி.பார்த்திபன்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பாதரை கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.படம்: கி.பார்த்திபன்
Updated on
1 min read

சசிகலா வெளியே வந்தால் இந்த ஆட்சி 4 மாதம் கூட இருக்குமா என்பது சந்தேகம் தான், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பாதரை ஊராட்சியில் திமுக சார்பில் நடைபெற்றமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

2009-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது, கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோதுகூட, அருந்ததியருக்கு 3 சதவீதம் இடஓதுக்கீடு செய்து தன்னிடம் எழுதி கொடுத்ததை பேரவையில் படித்ததை தற்போது நினைத்து பார்க்கிறேன்.

அமைச்சர் தங்கமணி பழகுவதற்கு இனியவர். இனிமையாக பேசுபவர். ஆனால் தங்கமணி, வேலுமணியைபோல் யாராலும் ஊழல் செய்ய முடியாது. இதுகுறித்த பட்டியல் ஆளுநரிடம் கொடுத்து 2 மாதங்கள் ஆகியும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆதாரம் பொய் என்றால் எங்கள் மீது பொய் வழக்கு போட்டிருக்கலாம்.

நிலக்கரி கொள்முதலில் ரூ.950.26 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. நேற்று முன்தினம் அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்தது விவசாயிகள் பற்றி பேசுவதற்கு அல்ல. வரும் 27-ம் தேதி சசிகலா வெளியே வரும் பயத்தால் சந்தித்தார்.

சசிகலா வெளியே வருவதால் இந்த ஆட்சி 4 மாதம்கூட இருக்குமா என்பது சந்தேகம்தான். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in