பள்ளிகளுக்கு வராத, கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இணைய வழிக் கல்வியைத் தொடர நடவடிக்கை ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் தகவல்

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாநில திட்ட இயக்குநர் லதா ஆய்வு மேற்கொண்டார். அருகில் ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாநில திட்ட இயக்குநர் லதா ஆய்வு மேற்கொண்டார். அருகில் ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி.
Updated on
1 min read

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மற்றும் பள்ளிக்கு வருகை தராத மாணவ, மாணவி களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் இணையவழி கல்வி தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஒருங்கி ணைந்த கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் லதா கூறியுள்ளார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எனவே, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்கள் பொதுத் தேர்வு எழுத இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் பள்ளி வருகையை, ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் லதா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். மாநில திட்ட இயக்குநர் லதா கூறியதாவது:

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டு உள்ளன.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மற்றும் பள்ளிக்கு வருகை தராத மாணவ, மாணவி களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் இணையவழி கல்வி தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் அனைத்து வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்றி மாணவ, மாணவிகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

70 சதவீதம் வருகை

ஓசூர் மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சானிடைசர் வழங்கி கைகளை சுத்தப்படுத்திய பின்னர் வகுப்பறைகளுக்கு செல்ல அனுமதித்தனர்.

கரோனா தடுப்பு விதிமுறை களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் கவிதா அறிவுரை வழங்கினார்.

தருமபுரியில் ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in