

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 12 இடங்களில் நேற்று ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. திமுக மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் வரவேற்றார். முன்னாள் எம்பிக்கள் சுகவனம், வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தருமபுரி மக்களவை உறுப்பினர், மருத்துவர் செந்தில்குமார் பேசிய தாவது:
அரசு மீது பெண்கள் பல்வேறு குறைகளை கூறுகின்றனர். ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து பெண்கள் காத்திருக்கின்றனர். ரஜினி ரசிகர்கள் திமுகவில் இணைவது பலம் தான். பர்கூர் பகுதியில் படேதலாவ் ஏரி திட்டம் செயல்படுத்தாததால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஓசூரில் ஆலோசனை