தின்பண்டம் சாப்பிட்ட சிறுமி, சிறுவன் உயிரிழப்பு

யாஷினி, ஹரி. (கோப்புப்படம்)
யாஷினி, ஹரி. (கோப்புப்படம்)
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத் தில் வசிப்பவர் கூலித் தொழிலாளி பழனி. இவரது மகள் யாஷினி(6), மகன் ஹரி(4). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த இனிப்பு மற்றும் வடை உள்ளிட்ட தின்பண்டங்களை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஹரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், தி.மலை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், தம்பதியினர் வீடு திரும்பியபோது, சிறுமி யாஷினியும் உயிரிழந்து கிடந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகன் மற்றும் மகள் உயிரிழந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாச்சல் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், பழனியின் வீட்டில் இருந்த இனிப்பு உள்ளிட்ட தின்பண்டங்களை காவல் துறையினர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in