

திருநெல்வேலியில் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பரமசிவ ஐயப்பன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தேமுதிக சார்பில் மாவட்ட பொருளாளர் சண்முகவேல், அண்ணா திராவிடர் கழகம் சார்பில் நயினார் சுந்தரம், சசிகலா பேரவை சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் வேம்பையா பாண்டியன் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தென்காசி
தூத்துக்குடி
அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி.த.செல்லப் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக மாநில அமைப்புச் செயலாளர் இரா.ஹென்றி தலைமையில் அக்கட்சியினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கோவில்பட்டி
கயத்தாறில் அமமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.