டெல்டாவில் பயிர்க் காப்பீடு நிறுவனம் மறு கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்

டெல்டாவில் பயிர்க் காப்பீடு நிறுவனம்  மறு கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்
Updated on
1 min read

மன்னார் குடியில் எம்எல்ஏ டிஆர்பி.ராஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

பயிர்க் காப்பீடு நிறுவனத்தின் வழக்கமான சம்பா சாகுபடி குறித்த அறுவடை ஆய்வு பணி, டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்னரே முடிவடைந்துவிட்டது.

அதன் பின்னர், தொடர் மழை பெய்ததன் காரணமாக திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், ஏற்கெனவே காப்பீடு நிறுவனத்தால் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பின்படி நிவார ணம் அறிவித்தால், விவசாயி களுக்கு எவ்வித பயனும் இருக்காது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் காப்பீடு நிறுவனம் மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏற்கெனவே இன்சூரன்ஸ் ஆய்வுக்கு வந்தவர்கள். தமிழ் தெரியாத இந்தி பேசும் அலுவலர்களாக வந்திருந்தனர். இதனால், விவசாயிகளின் எந்த கருத்தும் அறுவடை ஆய்வு செய்த அலுவலர்களுக்கு புரியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in