

சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிதிக் காப்பாளர் ஜான்லியோ சகாயராஜ் முன்னிலை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி ஜனவரி 29-ம் தேதி மாநில அளவில் 20 மண்டலங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, ஜனவரி 24-ம் தேதி மாநில அளவிலான கூட்டத்தை மதுரையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.