சூரியசக்தி பம்ப்செட் அமைக்க மானியம் பெற அழைப்பு

சூரியசக்தி பம்ப்செட் அமைக்க மானியம் பெற அழைப்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருப்பூர்மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், சூரிய சக்தியால் (சோலார்) இயங்கும்மோட்டார் பம்ப் செட்டுகள்அமைக்க ஆதிதிராவிட மற்றும்பழங்குடியின விவசாயிகளுக்கு 13 பம்ப் செட்டுகள் வழங்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக, விவசாயிகளுக்கு 5 குதிரைசக்தி (எச்.பி.) திறன் கொண்ட சோலார் பம்ப் செட் அமைக்க அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 42303, 7.5 குதிரைசக்தி கொண்ட சோலார் பம்ப்செட் அமைக்க ரூ.3 லட்சத்து 67525, 10 குதிரைசக்தி கொண்ட சோலார் பம்ப் செட் அமைக்க ரூ.4 லட்சத்து 39629 செலவாகும். இதில், 70 சதவீதத் தொகை அரசு மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், சூரியசக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கும்போது, நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைக்க உறுதிமொழி அளிக்க வேண்டும்.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், தாராபுரத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், உடுமலையிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் விண்ணப்பித்து பயன் பெறலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in