கள்ளக்குறிச்சியில் கரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று குறித்து  விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் கிரண் குராலா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் கிரண் குராலா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களிடம் கரோனா குறித்துநேற்று முதல் 21 நாட்களுக்கு அதிநவீன மின்னணு வசதிகொண்டஎல்இடி திரை கொண்ட வாகனத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளிகள் கடைப்பிடித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் இந்த வாகனத்தின் வாயிலாகஒளிபரப்பபடும். இவ்வாகனத்தை நேற்று கள்ளக்குறிச்சி ஆட்சியர்கிரண் குராலா கொடிய சைத்து தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதீஷ்குமார், கரோனா நோய் தொற்று முதன்மை மருத்துவ கண்காணிப்பு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in