

சிவகங்கையில் கதர்கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் முதல் காட்சியில் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்' திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.
சிவகங்கை காந்தி வீதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையரங்கு இயங்கி வருகிறது. இத்திரையரங்குக்கு, கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் வருகை குறைந்ததால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் திரையரங்கை விலைக்கு வாங்கிய தொழிலதிபர் ஒருவர், 4 ‘கே’ லேசர் தொழில் நுட்பம், டால்பி சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளுடன் 3 திரையரங்குகளாக மாற்றி அமைத்துள்ளார். அதன் திறப்பு விழா நேற்று நடந்ததுடன் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும் வெளியிடப்பட்டது.
விழாவுக்கு வந்த அமைச்சர் ஜி.பாஸ்கரன் முதல் காட்சியில் ‘மாஸ்டர்' படத்தை பார்த்து ரசித்தார்.