தேவகோட்டை அருகே ஆற்று வெள்ளத்தால் 3 கிராமங்கள் துண்டிப்பு

தேவகோட்டை அருகே ஆற்று வெள்ளத்தால் 3 கிராமங்கள் துண்டிப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆற்று வெள்ளத்தால் 3 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

தேவகோட்டை வட்டம், கீழ உச்சாணி கிராமத்தையும் துதியணி, சுண்டூரணி, ஆலன்வயல் ஆகிய கிராமங்களையும் இணைக்கும் சாலையின் குறுக்கே மணிமுத்தாறு செல்கிறது. இதற்காக ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கீழஉச்சாணி அருகேயுள்ள கண்மாயின் கலுங்கு உடைந்து மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்று பாலத்தின் மேற்பகுதியிலும் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

துதியணி, சுண்டூரி, ஆலன்வயல் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைத்து தேவைகளுக்கும் கீழஉச்சாணிக்குத் தான் வர வேண்டும். மேலும் அவர்கள் கீழஉச்சாணி வழியாகத் தான் வெளியூர் செல்ல முடியும். இந்நிலையில் வெள்ளநீர் கீழஉச்சாணியில் உள்ள பள்ளியிலும் புகுந்துள்ளது.

வெள்ளம் தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஊராட்சித் தலைவர் லதாசந்திரசேகர் தகவல் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in