

சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 59,800 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சேலம் வந்தடைந்தன.
நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வரும் 16-ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக, புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி 59,800 பாட்டில்களில் சேலம் வந்தன.
சென்னையில் இருந்து வந்த தடுப்பூசிகள் ஆட்சியர் ராமன் முன்னிலையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்நிகழ்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செல்வகுமார் உடன் இருந்தார். சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 22,900, ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 4,900, நாமக்கல் மாவட்டத்துக்கு 8,700, தருமபுரி மாவட்டத்துக்கு 11,800 கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 11,500 என மொத்தம் 59,800 தடுப்பூசிகள் வந்துள்ளன.
சேலம் சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என 931 இடங்களில் பணிபுரியும் அரசுத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்ளிட்ட 8,617 பேர், தனியார் மருத்துவர்கள் 12,177 பேர் உள்ளிட்ட 20,794 பேர் தடுப்பூசி போட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 256 இடங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட 2,919 பேர் தனியார் மருத்துவர்கள் உள்ளிட்ட 1,605 பேர் என மொத்தம் 4,524 பேர் தடுப்பூசி போட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
16 மையங்கள்