

திருநெல்வேலி மானூர் அருகே உள்ள கீழப்பிள்ளையார்குளம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பார்வதி (46). இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமசாமி மகன் காளியப்பன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், பார்வதி நேற்று அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், தாழையூத்து டிஎஸ்பி அர்ச்சனா உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.