வேளாளர் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில், கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில், கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Updated on
1 min read

ஈரோடு வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த பொங்கல் திருவிழா வில், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் நேற்று பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதனை யொட்டி வண்ணக்கோலங்கள் இடப்பட்டு, கரும்புகளைக் கொண்டு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. மண்பானையில் பொங்கலிடப்பட்டு, அதனை பிரசாதமாக படைத்து வழிபாடு நடந்தது.

விழாவில், வேளாளர் கல்வி நிறுவனத்தின் செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், இணைச்செயலாளர் செ.நல்ல சாமி, கல்லூரி முதல்வர் எம்.ஜெயராமன், டீன் பி.ஜெயச்சந்தர், நிர்வாக மேலாளர் என்.பெரிய சாமி, சங்கமேஸ்வரன் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர் கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். வ்ழிபாட்டினைத் தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in