நெல்லையில் 5 மாவட்ட செவிலியர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம். 		           படம்: மு. லெட்சுமி அருண்.
தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம். படம்: மு. லெட்சுமி அருண்.
Updated on
1 min read

தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்திஉண்ணாவிரதப் போராட்டம்நடத்தப்பட்டது. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி எதிரே நடைபெற்ற இப்போராட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். சுகாதாரத்துறையில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணிசெய்யும் எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கும் உரிய ஊதியம் மற்றும் அனைத்து பணப்பலன்களை வழங்க வேண்டும். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் என்ற உத்தரவை காலதாமதமின்றி அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது.

மாவட்டத் தலைவர்கள் ஆஷா ஆலிஸ் மாதரசி (திருநெல்வேலி), ஜான் பிரிட்டோ (கன்னியாகுமரி), சரஸ்வதி (தென்காசி), கலையரசி (தூத்துக்குடி), ஜேசுடெல்குயின் (விருதுநகர்) உள்ளிட்டோர் கூட்டு தலைமை வகித்தனர். அரசு அனைத்து ஆய்வக நுட்புனர் சங்க மாநில பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, அரசு மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலாளர் ஞானப்பிரகாசம், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க மாநிலப் பொருளாளர் மைக்கேல் லில்லிபுஷ்பம் சிறப் புரை ஆற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in