

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சங்க தலைவர் பேர்சில் தலைமை வகித்தார். சின்னத்துரை, முருகன், தேவசகாயம், டேவிட் ராஜா, பார்வதி முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுகந்தி வரவேற்றார். வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்றச் செயலாளர் மகா.பால்துரை சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு பேசினார்.