சேத்துப்பட்டு அருகே முதுகு தண்டுவடம் பாதித்தவருக்கு சக்கர நாற்காலி வழங்கிய ஆட்சியர் தங்கையின் கல்விக்கும் உதவி தொகை

சேத்துப்பட்டு அடுத்த ஆவியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனுக்கு சக்கர நாற்காலி வழங்கிய தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
சேத்துப்பட்டு அடுத்த ஆவியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதனுக்கு சக்கர நாற்காலி வழங்கிய தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
Updated on
1 min read

சேத்துப்பட்டு அருகே முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத் திறனாளிக்கு ரூ.78 ஆயிரம் மதிப்பில் மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆவியந் தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் ஜெகநாதன். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவரது தங்கை சத்யா, தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். இவரது கல்லூரி படிப்புக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கல்விக் கட்டணத்துக்கான நிதியை வழங்கி உதவுமாறு வாட்ஸ்- அப் மூலம் ஆட்சியருக்கு ஜெகநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, மாற்றுத்திறனாளி ஜெகநாதன் மற்றும் சத்யா ஆகியோரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி விசாரித்துள்ளார். அவர்களது குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சத்யாவின் இறுதி யாண்டு கல்விக் கட்டணத்துக்காக கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.31 ஆயிரத்துக் கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.

மேலும் அவர், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் ஜெகநாதனுக்கு ரூ.78 ஆயிரம் மதிப்பில் மின் கலத்தால் இயங்கும் சக்கர நாற் காலியை வழங்கினார். அப்போது, தங்கையின் படிப்புக்காக முயற் சித்த ஜெகநாதனை ஆட்சியர் பாராட்டினார்.

தங்கையின் கல்விக்காக நிதி உதவி கேட்டு வந்த தனக்கு சக்கர நாற்காலி வழங்கிய ஆட்சியருக்கு ஜெகநாதன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in