அதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்

வேலூர் கொணவட்டத்தில் தீயசக்தி திமுகவை விரட்டியடிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கே.சி.வீரமணி. அருகில், மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி உள்ளிட்டோர்.
வேலூர் கொணவட்டத்தில் தீயசக்தி திமுகவை விரட்டியடிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கே.சி.வீரமணி. அருகில், மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

‘தீய சக்தி திமுகவை விரட்டியடிப் போம்’ என்ற கையெழுத்து இயக் கத்தை அமைச்சர் கே.சி.வீரமணி வேலூரில் நேற்று தொடங்கி வைத்தார்.

திமுக சார்பில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் திமுக சார்பில் நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள்,அதிமுக அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் ‘தீய சக்தி திமுகவை விரட்டியடிப்போம்’ என்ற கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி வேலூர் கொணவட்டம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாணவரணி செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு முன்னிலை வகித்தார்.

வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ‘தீய சக்தி திமுகவை விரட்டியடிப்போம்’ என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், பொதுமக்கள் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று கட்சி தலைமைக்கு அனுப்பி வைக் கப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளர் எம்.மூர்த்தி, மாண வரணி துணைத் தலைவர் குணா, எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராகேஷ், அம்மா பேரவை இணைச்செயலாளர் சுகுமார், அம்மா பேரவைச் செய லாளர் அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in