பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக ஈரோட்டில் நோய் தடுப்பு பணி தீவிரம் தனி அலுவலர்கள் நியமித்து கண்காணிப்பு

பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக ஈரோட்டில் நோய் தடுப்பு பணி தீவிரம்  தனி அலுவலர்கள் நியமித்து கண்காணிப்பு
Updated on
1 min read

பறவைக்காய்ச்சல் பீதி நிலவும் நிலையில், வெளிமாவட்ட மாநிலங்களிலிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு முட்டை, கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இதுவரை தென்படவில்லை. எனினும் கோழிப்பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிமாவட்ட மாநிலங்களிலிருந்து முட்டை, கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

மேலும், மாவட்டத்தில் கடம்பூர், பர்கூர், பவானி, கொடுமுடி உள்ளிட்ட பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருந்து தெளித்த பிறகு வாகனங்கள் உள்ளே வர அனுமதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in