மின்திருட்டில் ஈடுபட்டவர்களிடம் ரூ.97 ஆயிரம் அபராதம் வசூல்

மின்திருட்டில் ஈடுபட்டவர்களிடம்  ரூ.97 ஆயிரம் அபராதம் வசூல்
Updated on
1 min read

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ.97 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது, என நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பட்டணம், எலச்சிபாளையம், ராசிபுரம் (ஊரகம், தெற்கு), வையப்பமலை (மேற்கு), மெட்டாலா மற்றும் முள்ளுக்குறிச்சி பகுதிகளில் மின்வாரிய கோவை அமலாக்க கோட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 10 மின் திருட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டன. தொடர்ந்து மின்திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து 926 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்து அதற்குரிய சமரசத்தொகை ரூ.97 ஆயிரம் செலுத்தினர். இதனால் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பது கைவிடப்பட்டது. மின் திருட்டு புகார்களை பொ துமக்கள் தெரிவிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in