Regional01
திருச்சி குழுமாயி அம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் ஆறுகண் பாலம் அருகே குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. கோயில் அர்ச்சகர்கள் நேற்று அதிகாலை கோயிலை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த உண்டியலை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த புத்தூர் அரசு மருத்துவமனை போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற் கொண்டனர். மேலும் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
