

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் நூறு நாள் வேலை திட்டப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பிற்பகலில் உணவு இடைவேளையின்போது, தொழிலாளர்கள் சிலர் அப்பகுதியிலுள்ள கூரை வீட்டில் அமர்ந்து இளைப்பாறினர்.
அப்போது, தொடர் மழை காரணமாக வீட்டின் மண் சுவர் இடிந்துவிழுந்தது. இதில், பலத்த காயமடைந்த கண்டிதம்பட்டு மாதா கோயில் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி இருதயமேரி(52), ராஜசேகர் மனைவி புனிதமேரி(45), வின்சென்ட் சேகர் மனைவி அருள்மேரி(48) ஆகியோர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், இருதயமேரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந் தார்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.