மணிமுத்தாறு அணையும் நிரம்பியது: உபரிநீர் திறப்பு

மணிமுத்தாறு அணையும் நிரம்பியது: உபரிநீர் திறப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணை நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 142.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,061.97 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் அணையிலிருந்து 1,942.29 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையும் நேற்று நிரம்பியது. நீர்மட்டம் நேற்று காலையில் 117.40 அடியாக இருந்தது. அணையிலிருந்து நேற்று காலை 9.30 மணியளவில் 200 கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் உபரியாக திறந்துவிடப்பட்டது. அணைக்கு விநாடிக்கு 642 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற அணைகளின் நீர்மட்டம்: சேர்வலாறு- 144.26 அடி, வடக்கு பச்சையாறு- 31அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடு முடியாறு- 27 அடி.

மாவட்டத்தில் அணைப் பகுதி களிலும் பிறஇடங்களிலும் நேற்று காலை 8 மணிநிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 23, சேர்வலாறு- 12, மணிமுத்தாறு- 6.6, நம்பியாறு- 18, அம்பாசமுத்திரம்- 0.60, சேரன் மகாதேவி- 1, நாங்குநேரி- 2, ராதாபுரம்- 22, களக்காடு- 12.8, பாளையங் கோட்டை- 5.20, திருநெல்வேலி- 4.

தென்காசி

ஜன.12- முதல் பாசனத்துக்கு நீர் திறப்பு

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

மணிமுத்தாறு அணையில் இருந்து மணிமுத்தாறு பிரதான கால்வாயின் 1 மற்றும் 2-வது ரீச்சுகளின் கீழ் உள்ள மறைமுக பாசனப்பகுதிகளில் பிசான சாகுபடிக்கு தண்ணீர்திறக்க விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவற்றை ஏற்று, ஜன.12-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை 79 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால் 11 ஆயிரத்து 134 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in