பனை தொழிலை ஊக்குவிக்க சிறப்பு பயிற்சி முகாம்

பனை தொழிலாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றவர்கள்.
பனை தொழிலாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றவர்கள்.
Updated on
1 min read

சர்வோதய சங்கம் சார்பாக பனைத் தொழிலை ஊக்குவிக் கும் வகையில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர் சர்வோதய சங்கமும் மத்திய அரசின் கதர் கிராம கைத்தொழில் ஆணையம் (ஸ்பூர்த்தி) இணைந்து பனை தொழி லாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாம் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தில் கடந்த 4-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில், 250-க்கும் மேற் பட்டோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சர்வோதய சங்கத்தின் செய லாளர் லோகேஸ்வரன் தலைமை தாங்கினார். தலைவர் செல்வ திருப்பதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக உதவி இயக் குனர்கள் சித்ரா, பிரபாகரன் (கேவிஐசி) ஆகியோர் பங் கேற்றனர்.

சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என செயலாளர் லோகேஸ்வரன் தெரிவித்தார். முடிவில், பொருளாளர் வெங்கடேசன் நன்றி தெரிவித்தார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in