

ராமநாதபுரம் அருகே சக்கரக் கோட்டையைச் சேர்ந்த மைனர் மனைவி நாகலட்சுமி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது பிரசவத்துக்காக ராம நாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் டிச.14-ல் அனுமதிக்கப்பட்டார்.
டிச.18-ல் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் வீட்டுக்குச் சென்று விட்டனர். இந்நிலையில், செவிலியர் ஒருவரது பெயரில் அவருக்கு வந்த கடிதத்தில், அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை மாற்றி பெண் குழந்தையை வைத்ததாக இருந்தது. இது குறித்து புகாரின்பேரில் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.