அஞ்சல்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அஞ்சல்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் குறித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணியம் கூறியதாவது:

இலக்கு நிர்ணயம் என்ற பெயரில், ஊழியர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலையை போக்க வேண்டும் கிராமப்புற அஞ்சலக காப்பீடு திட்டத்தின் கீழ் அதிக நபர்களை சேர்க்க நிர்ப்பந்தப்படுத்துவதைக் கைவிட வேண்டும்.

இதே நிலை தொடர்ந்தால் தர்ணா போராட்டம் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தப்போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபடும் நிலை ஏற்படும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in