நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
Updated on
1 min read

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆய்வுக் கூட்டம், உதகையிலுள்ள ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் தலைமை வகித்து பேசும்போது, "இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி தகுதி வாய்ந்த எந்தவொரு வாக்காளரும் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படக்கூடாது. அதேபோல, தகுதி இல்லாத வாக்காளர்கள் இடம்பெறக்கூடாது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா எனவும் உறுதி செய்ய வேண்டும்.

பெயர் நீக்கம் செய்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவித்து நீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

இதைத்தொடர்ந்து, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதவி ஆட்சியர் மோனிகா ரானா, சார் ஆட்சியர் ரஞ்சித்சிங், கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பட விளக்கம்

உதகையிலுள்ள ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலுள்ள சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்களில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் உள்ளிட்டோர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in