

வாழப்பாடி வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடப்பு அறுவடை சீசனில் நேற்று அதிகபட்சமாக 1,500 மூட்டை பருத்தி ரூ.30 லட்சத்துக்கு விற்பனையானது.
வாழப்பாடி வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கம் வாரந்தோறும் புதன்கிழமை கூடுகிறது.
இங்கு வாழப்பாடி சுற்று வட்டார விவசாயிகள், கள்ளக் குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் என ஏராளமானோர் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஏலம் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் மாதத் தில் இருந்து பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் 1,500 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.
இதில், டிசிஹெச் ரகம் அதிகபட்சமாக ரூ.7,777-க்கும், குறைந்தபட்சம் ரூ.4,369-க்கும் ஆர்சிஹெச் ரகம் அதிகபட்சம் ரூ.6,449-க்கும், குறைந்தபட்சம் ரூ.4,800-க்கும் விற்பனையானது. நேற்று ரூ.30 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.