

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர் களுக்கு 20 சதவீத தனிஇட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகமுன் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகர் மாவட்டச் செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, மாநில துணை பொதுச்செயலாளர் இரா. அன்பழகன், இளை ஞரணி துணைத் தலைவர் அந்தோணி ராஜ், மாநகர் மாவட்டத் தலைவர் முத்துசரவணன் பங்கேற்றனர்.
பின்னர் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையரிடம் பாமக சார்பில் அம்பாசமுத்திரம் ஒன்றிய செயலாளர் மகாராஜன் தலைமையில், வன்னிய சமுதாயத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் ஹரிராம், நகரச் செயலாளர் மாரியப்பன், கல்லிடைக்குறிச்சி பேரூர் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.