பேச்சுவார்த்தை தோல்வி சிவகங்கையில் விவசாயிகள் இன்று முற்றுகை போராட்டம்

பேச்சுவார்த்தை தோல்வி சிவகங்கையில் விவசாயிகள்  இன்று முற்றுகை போராட்டம்
Updated on
1 min read

சிவகங்கையில் ஆட்சியர் தலை மையில் நடந்த கூட்டத்துக்கு பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் வராததைக் கண் டித்து விவசாயிகள் வெளிநடப்புச் செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 129 கண்மாய்களுக்கு ஒருபோக சாகுபடிக்கு செப்.27-ல் வைகை அணையில் இருந்து பெரியாறு நீர் திறக்கப்பட்டது. ஆனால், சிவகங்கை மாவட்டத்துக்கு முறையாக வழங்கவில்லை. இதைக் கண்டித்து ஜன.7-ல் சிவகங்கை ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிடப் போவ தாக விவசாயிகள் அறிவித்தனர்.

இது தொடர்பாக சில தினங் களுக்கு முன் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப் படவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.மதுசூதன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இதில், தலைமைப் பொறியாளர் பங் கேற்கவில்லை. இதைக் கண்டித்து பெரியாறு பாசன விவசாயிகள் வெளிநடப்புச் செய்தனர்.

இதுகுறித்து ஐந்து மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன் வர் கூறுகையில், இப்பிரச்சினைக்குப் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மட்டுமே தீர்வு காண முடியும். ஆனால் அவர் வரவில்லை. அதனால் வெளி நடப்பு செய்தோம். திட்டமிட்டபடி இன்று முற்றுகைப் போராட்டம் நடக்கும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in