ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சீர்கேடுகளை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் நூதனப் போராட்டம்

அரசு தலைமை மருத்துவமனையின் சீர்கேடுகளை கண்டித்து, ராமநாதபுரம் அரண்மனை முன்பு நூதனப்  போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள். படம்: எல். பாலச்சந்தர்
அரசு தலைமை மருத்துவமனையின் சீர்கேடுகளை கண்டித்து, ராமநாதபுரம் அரண்மனை முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள். படம்: எல். பாலச்சந்தர்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சீர்கேடுகளைக் கண்டித்து பெரியாரிய

உணர்வாளர்கள் மருத்துவர், நோயாளி வேடமணிந்து நூதனப் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை நேரத்தில் மருத்துவர்கள்

இல்லாதது, சிகிச்சை பெறும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது,

மருத்துவமனைக்கு அரசு வழங்கியுள்ள சாதனங்களை, தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வது

உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வருகின்றன.

இந்நிலையில், மருத்துவமனையின் சீர்கேடுகளை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு மருத்துவர், நோயாளிகள் போல வேடமணிந்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மண்டலச் செயலாளர் முகமதுயாசின், ஆதித்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், புரட்சிகர மார்க்சிஸ்ட் நிர்வாகி காத்தமுத்து, உழைக்கும் பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தனமேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in