

சேலம் அருகே 5 இடங்களில் ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது யார் என்பது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து ஆலப்புழா ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றபோது, வீரபாண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ஏறி இறங்கி தடதடவென சத்தத்துடன் சென்றது.
இதுதொடர்பாக ரயில் இன்ஜின் டிரைவர் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், ஈரோடு ரயில்வே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் மற்றும் ஈரோடு ரயில்வே போலீஸார் மகுடஞ்சாவடி-வீரபாண்டி இடையே ரயில் தண்டவாளம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டு அகற்றப் பட்டன.
கற்களை மர்ம நபர்கள் வைத்தார்களா? அல்லது அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாட்டாக கற்களை வைத்தார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.