ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேமநல நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.		                                   						   படம்: எஸ். குரு பிரசாத்

Updated on
1 min read

விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கான பண பலன்களை வழங்க வலியுறுத்தி, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக கோட்ட தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பு தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘சேமநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும். விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கான பண பலன்களை வழங்க வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் அகவிலைப்படி கொடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாநில பொதுச் செயலாளர் செல்வராசன், சேலம் கோட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in