அம்மை நோய் அச்சத்தால் சந்தைக்கு கால்நடை வரத்து குறைந்தது

சேலம் காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகள்.
சேலம் காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகள்.
Updated on
1 min read

மாடுகளுக்கு பரவி வரும் அம்மை நோய் காரணமாக, சேலம் மின்னாம்பள்ளி சந்தையில் விற்பனைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்தது.

சேலம் காரிப்பட்டி அடுத்த மின்னாம்பள்ளி கால்நடை சந்தை நேற்று முன்தினம் கூடியது. சந்தைக்கு வாழப்பாடி, காரிப்பட்டி, மின்னாம்பள்ளி, கூட்டாத்துப்பட்டி, செட்டிப்பட்டி, அத்தனூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கால்நடைகள் விற்பனைக்கு வரும். நேற்று முன் தினம் கூடிய சந்தையில், 200-க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் மாடுகள் விற்பனைக்கு வந்தன.

இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறும்போது, “கடந்த சில வாரங்களாக மாடுகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது. எளிதில் பரவும் அம்மை காரணமாக விவசாயிகள் மாடுகளை சந்தைக்கு கொண்டு வரவும், புதிய மாடுகளை வாங்கவும் அச்சம் அடைந்துளனர். இதனால், சந்தைக்கு விற்பனைக்கு வரும் கால்நடைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in