ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் குற்றவியல் நடவடிக்கை

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் குற்றவியல் நடவடிக்கை
Updated on
1 min read

தேசிய பசுமைத் தீர்ப்பாணையத்தின் உத்தரவுப்படி, மத்திய, மாநில அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் இனங்களை உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகை மீன்களை உற்பத்தி செய்வோர் மற்றும் வளர்ப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட மீன்வளர்ப்புக் குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அரசால் அழிக்கப்படும்.

மீன்பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல்கெண்டை, வெள்ளிக் கெண்டை மற்றும் கண்ணாடிக் கெண்டை மீன்கள் போன்ற இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளர்க்கலாம். இவ்வகையான மீன்களை வளர்ப்பதற்கு மீன்வளத்துறையால் பல்வேறு திட்ட மானியங்கள் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தை 0424 2221912, 93848 24368 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in