

வங்கிக் கடன் வழங்க வலியுறுத்தி சேலம் ஆட்சியரிடம் சாலையோர வியாபாரிகள் மனு அளித்தனர்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ராமன் தலைமையில் நடந்தது. சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் வந்த வியாபாரிகள், ஆட்சி யரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அயோத்தியாப்பட்டணத்தில் 30 ஆண்டு களாக 55 சாலையோர வியாபாரிகள் காய்கறி கடைகளை நடத்தி வருகின்றோம். மத்திய அரசின் பிரதமர் சேவா நிதியில் இருந்து தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடனுதவி கேட்டு சாலையோர வியாபாரிகள் வங்கிக்கு சென்றால் கடன் வழங்க மறுத்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடனுதவி வழங்க வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.