

சேலம் இளம்பிள்ளை உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (89). இவர் வீட்டிலேயே பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த மர்ம நபர் தன்னை அதிகாரி என்று கூறியதோடு, கடையில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா என கேட்டார்.
மேலும், வீட்டில் இருந்த பீரோவை திறந்து சோதனை செய்தபோது, மாணிக்கத்துக்கு தெரியாமல் அதில் இருந்த தங்க செயினை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார். இதுதொடர்பாக மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.